Wednesday, April 13, 2011

5- 10

தனு: பௌஷ்பம் மௌர்வீ மது கர மயீ பஞ்ச விசிகா:
வஸந்த: ஸாமந்தோ மலய மருத் ஆயோதன ரத:
ததாப்யேக: சர்வம் ஹிமகிரி ஸுதே காமபி க்ரிபாம்
அபாங்காத்தே லப்த்வா ஜகதிதம் அனங்கோ விஜயதே

Oh Daughter of the Ice Mountain! The God Of Love who does not posess
a physical body and has a flower bow with bow string made of honey bees,
five arrows made only of tender flowers, with spring as an aide and riding
on a chariot of Malaya Mountain's breeze, is able to win all the world alone, with only a sideways glance of your Holy Eyes.

ஹிமவான் பெற்ற புத்திரியே!
மலரினால் செய்த வில்லை உடையவனும், தேனீக்களால்
செய்த வில்லின் நாணைக் கொண்டவனும், ஐந்து பூ
மொட்டுக்களால் ஆன வில்லை உடையவனும், வசந்தத்தை
அமைச்சராகக் கொண்டவனும், மலய மலையின் தென்றலை
தேராகக் கொண்டவனும் ஆன மன்மதனால், தனக்கென உடல்
என்ற ஸ்தூல சரீரம் இல்லாத போதும், உனது கடைக்கண்
பார்வையால் இவ்வுலகை வெல்ல முடிந்தது.

க்வணத் காஞ்சீ தாமா கரி கலப கும்ப ஸ்தன நதா
பரீக்ஷீணா மத்யே பரிணத சரச்சந்திர வதனா
தனுர் பாணான் பாசம் ஸ்ருணிம் அபி ததானா கரதலை:
புரஸ்தாத் ஆஸ்தாம் ந: புரமதிதுர் ஆஹோ புருஷிகா

With a golden belt beautified by tiny tingling bells
You are slightly bent by your breasts which are like
an elephant's two frontal tusks. With a thin beautiful
frame and with a face like an autumn moon, You hold in
your hands a sugarcane bow, flower arrows, a noose and
a goad. You - the one who has the wonderful form of the
ego of the God who burnt the three cities (Shiva)
should please come and appear before us.

ஒலிக்கும் சிறு மணிகளால் அலங்கரிக்கப்பட்ட தங்க ஒட்டியாணம் அணிந்தவளே!
யானையின் இரு தந்தங்களைப் போல உள்ள உன் இரு மார்புகளால் சற்றே வளைந்து இருப்பவளே!
மெல்லிய உடல் வாகோடு, நிலவைப் போன்ற குளிர் முகத்தோடு இருப்பவளே!
கையில் கரும்பு வில்லும், மலர் அம்புகளும், பாச, அங்குசமும் வைத்திருப்பவளே!
மூன்று நகரங்களை எரித்த கடவுளின் (சிவனின்) குணம் தாங்கியவளே!
தயை கூர்ந்து நீ எங்கள் முன் வந்து எங்களுக்கு காட்சி தருவாயாக.

ஸுதா ஸிந்தோர் மத்யே ஸூர விடபி வாடீ பரிவ்ருதே
மணி த்வீபே நீபோபவனவதி சிந்தாமணி க்ருஹே
சிவாகாரே மஞ்சே பரம சிவ பர்யங்க நிலயாம்
பஜந்தி த்வாம் தன்யா: கதிசன சித் ஆனந்த லஹரீம்

In an island of precious gems located amid a sea of nectar surrounded
by wish giving kalpaga trees, is located a garden of Kadamba trees.There
in the house of the gem of thought, on the holy seat of the lap of the great
God Shiva, She sits like a tide in the sea of happiness of ultimate truth
worshipped only by a few select holy men.

அமிர்தக் கடலின் மத்தியில், வரங்கள் தரும் கற்பக மரங்கள்
சூழ்ந்த விலை உயர்ந்த ரத்தினங்களால் நிறைந்த ஒருதீவில், கடம்ப மரங்களால் ஆன ஒரு நந்தவனம் அமைந்துள்ளது. எண்ணங்களின் ரத்தினமான இல்லத்தில், பரப்ரஹ்மம் ஆன ஆனந்த சமுத்திரத்தின் அலையைப் போல, மிகச் சில புனிதர்களால் மட்டுமே வணங்கப்படும் தாய், சிறந்த கடவுளான சிவனின் மடி என்ற புனித இருக்கையில் அமர்ந்துள்ளாள்.

மஹீம் மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம்
ஸ்திதம் ஸ்வாதிஷ்டானே ஹ்ருதி மருத மாகாசம் உபரி
மனோ(அ)பி ப்ரூ மத்யே ஸகலமபி பித்வா குலபதம்
ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரசே

Oh,my Goddess! In the thousand petalled lotus,You live in seclusion with
your consort.This lotus can be reached after breaking through the microways of
1. The power of earth in Mooladhara,
2. The power of water in Manipoora,
3. The power of fire in swathishtana,
4. The power of air in heart(Anahatha),and
5. The power of ether in between the eyelids(Agna).

என் தாயே! ஆயிரம் இதழ் கொண்ட தாமரையில், நீ தனிமையில்
உனது துணையுடன் வசிக்கின்றாய். இந்தத் தாமரையை கீழ்கண்ட தளைகளை உடைத்து தான் வர முடியும்:
1. மூலாதாரமான பூமியின் சக்தி
2. மணிபூரகமான நீரின் சக்தி
3. ஸ்வாதிஷ்டானமான அக்னியின் சக்தி
4. அனாஹதமான (இருதயத்தில்) காற்றின் சக்தி
5. ஆக்னமான (புருவங்களின் இடையில்) ஆகாயத்தின் சக்தி.

ஸூதா தாரா ஸாரை: சரண யுகளாந்தர் விகளிதை:
ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புனரபி ரஸாம்நாய மஸ:
அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜக நிபம் அத்யுஷ்ட வலயம்
ஸ்வம் ஆத்மானம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி

All the nerves of the body are drenched using the nectar flowing in
between your feet. You descend from the moon with nectar like
rays, reaching back to your place, coiling your body into a ring like
that of a serpent and sleeping in the Mooladhara with a hole in the middle.

உனது கால்களின் இடையே ஓடும் அமிர்தத்தால், உடலில்
உள்ள எல்லா நரம்புகளும் நனைந்துள்ளன. நிலவிலிருந்து,
தேன் போன்ற கிரணங்களைப் போன்று நீ இறங்கி வந்து, உனது
இடத்தை அடைந்து, உனது உடலை சர்ப்பத்தைப் போல்
வளைத்து, மூலாதாரத்தின் நடுவில் ஒரு துளை இருப்பது
போல நீ உறங்குகின்றாய்.

No comments:

Post a Comment